கஜா பாதிக்க இடங்களுக்கு நிதி – விருந்து வைத்து பணம் திரட்டல்


இந்தியாவின் தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய, விருந்து வைத்து பணம் திரட்டி  அமெரிக்கவாழ் தமிழர்கள் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.

 

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிழப்புகள் ஏற்பட்டன.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் சேர்ந்து பல தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகின்றனர்.

 

தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த பலரும் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.

 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு,  வாஷிங்டன் நகரில் இருக்கும் எய்ம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம், விருந்து ஏற்பாடு செய்து பணம் திரட்டியுள்ளது.

 

சென்னை எக்ஸ்பிரஸ் உணவகம் இலவசமாக வழங்கிய உணவை, வாஷிங்டன் நகர தமிழர்கள் சாப்பிட்டு நன்கொடை வழங்கி சென்றுள்ளனர்.

 

வேதாரண்யம் பகுதியில் இருக்கும் 7 கிராமங்களில் 650 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதோடு, மேலும் 8 கிராமங்களுக்கு உதவி செய்யப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Add new comment

3 + 0 =