கசோஜியை கொல்ல சௌதி இளவரசர் உத்தரவிட்டாரா?


பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை கொலை செய்ய சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமெரிக்காவின் சிஐஏ நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த கொலை தொடர்பான ஆதாரங்களில் சிஐஏ விரிவான மதிப்பீடு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

சௌதியின் துணை தூதரகத்தில் நடைபெற்றுள்ள இதுபோன்றதொரு கொலை சல்மானின் அனுமதி இல்லாமல்  நடந்திருக்க முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக தெரிகிறது.

 

கொலை தொடர்பாக பட்டத்து இளவரசருக்கு ஏதும் தெரியாது என்று சௌதி கூறுகிறது. அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகளை சௌதி அரேபியா மறுகிறது.

 

இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் துணை தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்ட கசோஜியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

துருக்கியும் சௌதியின் உயர் அதிகாரிகளிடம் இருந்தே கசோஜியை கொலை செய்யும் உத்தரவு வந்ந்திருக்கும் என்று கூறுகிறது.

Add new comment

5 + 7 =