ஓரினச்சேர்க்கையாளரின் திருமணத்திற்கு எதிராக தைவான் கத்தோலிக்க திருச்சபை


ஓரினச்சேர்க்கையாளரின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக தைவான் கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

தைவான் இது தொடர்பாக மக்களின் கருத்தை அறிகின்ற வாக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு வலுவாகியுள்ளது.

 

ஓரினச்சோர்க்கையாளரின் திருமணத்திற்கு எதிராகவே பெரும்பான்மையான நாட்டு மக்களும் வாக்களித்துள்ளனர்.

 

எனவே, 2017ம் ஆண்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சோர்க்கையாளரின் திருமணத்தை அங்கீகரித்து சட்டம் ஏற்ற வேண்டும் என்ற வழங்கிய உத்தரவு சிக்கலாகியுள்ளது,

 

சமத்துவம் வந்துள்ளதாக எண்ணப்பட்ட இந்த தீர்ப்புக்கு எதிராக பிற்போக்குவாத சக்திகள் செயல்பட்டு, அரசு மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அழுத்தம் கொடுத்தன.

Add new comment

3 + 0 =