ஓராண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புக்களை ஒழித்துவிட்ட மோடி


2018ஆம் ஆண்டில் மட்டுமே நாள்தோறும் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஒழித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

ஏழு கட்டங்களாக நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ஆரம்பமாகிறது.

 

மணிப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைநகரான இம்பாலில் பொதுக்கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

 

2018ஆம் ஆண்டு ஒரு கோடி வேலைவாய்ப்புகளை நரேந்திர மோடி நாசம் செய்துவிட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டினார்.

 

மோடி ஆட்சியில் ஒரு நாளில் 30,000 வேலைவாய்ப்புகள் காணமால் போய்விடுவதாகவும் அவர் கூறினார்.

 

இவ்வாறு செயல்படுபவர் 2 கோடி வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்குவேன் என்ற வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்ற போகிறார் என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.  

Add new comment

15 + 2 =