Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஓராண்டில் ஒரு கோடியே 10 லட்சம் வேலை இழப்பு
இந்தியாவில் கடந்த ஓராண்டு மட்டுமே ஒரு கோடியே 10 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
இந்திய அரசு வெளியிட தாமதித்த அறிக்கை ஒன்றின் தகவல்கள் கசிந்துவிட்டதால் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்துல் நடைபெற இருப்பதால், ஆளும் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆனால், வேலையில்லா திட்டாட்டம் தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் நடத்திய ஆய்வைஅரசு வெளியிடுவதை தாமதப்படுகிறது.
ஆனால், அதன் விவரங்கள் ஊடகங்களில் கசிந்து விட்டன.
இதில், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலையின்மை அளவு சுமார் 45 ஆண்டுக்கு முன்னதாக கடந்த 1972-73-ம் ஆண்டு நிலவியதற்கு ஒப்பாகும் என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தலைமையமைச்சர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முழுமையான
வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஊடகங்களில் வெளியான அறிக்கை குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வேலையின்மை பற்றி கசிந்துள்ள ரிப்போர்ட் கார்டு நாட்டின் பேரழிவை உணர்த்துகிறது என்று விமர்சித்துள்ளார்.
தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ஓராண்டில் ஒரு கோடியே 10 லட்சம் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டத்தை தனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருக்கும் தலைமையமைச்சர் மோடி இளைஞர்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்திருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
Add new comment