ஒரே நாளில் இரு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் மரணம்


பிப்ரவரி 10ம் தேதி இரண்டு பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் காலமாகியுள்ளனர்.

 

பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மார்பிள் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் தின்னுவால்டோ குற்றிரெஸ், தனது 79வது வயதில் பிப்ரவரி 10ம் தேதி காலை காலமானார்.

 

புற்றுநோயால் அவர் துன்புற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 20ம் தேதி அவருக்கு 80 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிலிப்பீன்ஸின் மத்தியிலுள்ள சான் கார்லோஸ் மறைமாவட்டத்தின் ஆயர் நிக்கோலஸ் மொன்டிலார் அதே நாள் மதியம் காலமானார்.

 

94 வயதான அவர் மிகவும் வயதான ஆயர்களில் 2வது மதகுரு ஆவார்.

 

நினோரஸ் அக்சிடன்றல் மகாணத்திலுள்ள சான் கார்லோஸின் முதல் ஆயராக நியமிக்கப்பட்ட இவரது 31வது ஆண்டு விழாவை கொண்டாடியுள்ள நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

 

ஆயர் நிக்கோலஸ் மொன்டிலார் காலமாகியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

 

ஆயர் குற்றிரெஸ் மார்பெல் மறைமாவட்டத்தில் 35 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார்.

 

ஏப்ரல் மாதம் 2018ம் ஆண்டு, புதிய ஆயர் நியமிக்கப்படுவது வரை 75வது வயதில் ஓய்வு விண்ணப்பித்த ஆயர் குற்றிரெஸ் ஆயராக தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Add new comment

13 + 7 =