ஒப்புரவு அருட்சாதன ரகசிய பாதுகாப்பை நியாயப்படுத்தும் பெல்ஜியம் ஆயர்கள்


அருட்தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிய பின்னர், பெல்ஜியம் ஆயர்கள் ஒப்புரவு அருட்சாதனத்தின் ரகசிய பாதுகாப்பை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

மனிதர் ஒருவர் தான் தற்கொலை செய்யப்போவதை தெரிவித்ததை வெளிப்படுத்தாமல் இருந்தததற்காக இடைநிறுத்தப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் பெற்றார்.

 

3 முறை தொலைபேசியில் அழைத்தும், 4 முறை குறுந்தகவல் மூலமும் வட துருவ நாட்டின் 54 வயதான மனிதரான டோனி வன்டோம்மி தனது தற்கொலை திட்டத்தை அருட்தந்தை அலெக்ஸாண்டர் ஸ்ரோபாக்டிட் அவர்களிடம் கூறியிருக்கிறார்.

 

இரண்டாவது முறை அழைத்தபோது, அவர் ஒப்புரவு அருட்சாதனம் வழங்க வேண்டுமென கேட்டுள்ளார்.

 

அவரது தற்கொலை முயற்சியில் இருந்து மாற்றிவிட எடுத்த எல்லாவித நடவடிக்கைகளுக்கு பின்னரும், வன்டோம்மி தன்னையே அழித்துகொண்டார்.

 

காவல்துறையினரிடம் இதனை கூறியிருந்தால், ஒப்புரவு அருடசாதனத்தின் ரகசிய பாதகாப்பை மீறுவதாக போய்விடும் என்று இந்த அருட்தந்தை கூறியதை நீதிமன்றம் எற்றுக்கொள்ளவில்லை.

 

தொலைபேசியில் நடத்த்பட்ட உரையாடல் ஒப்புரவு அருட்சாதனம் அல்ல என்று இந்த அருட்தந்தைக்கு எதிராக அவரது மனைவி வாதிட்டிருந்தார்.

 

இந்த சட்டத்திற்கு பிறகு, ஒப்புரவு அருட்சாதன ரகசிய பாதுகாப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமை என்று ஆயாகள் நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Add new comment

4 + 10 =