ஒன்பது ஆயிரம் ஆண்டு பழமையான முகமூடி


ஒன்பது ஆயிரம் ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

 

உலகிலுள்ள 15 கல் முகமூடிகளில் இதுவும் ஒன்று என இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையம் கூறியுள்ளது.

 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் அமைந்துள்ள  ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்ா ஆண்டு தொடக்கத்தில் கொள்ளையர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

 

இந்த முகமூடி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. கன்னத்தில் இருக்கின்ற எலும்புகளும், மூக்கும் வெகு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Add new comment

1 + 12 =