ஒசாமா பின்லேடனின் மகனின் குடியுரிமையை பறித்தது சௌதி அரேபியா


அல் கையீதா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடனின் குடியுரிமையைப் சௌதி அரேபியா பறித்துள்ளது.

 

சர்வதேச தீவிரவாத வட்டாரங்களில் ஹம்சா பின்லேடன் அடுத்த தீவிரவாத தலைவராக உருவாகி வருவதாக பேசப்பட்டுவருவதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஹம்சா பின்லேடனை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி அமெரிக்க அரசு பரிசு அறிவித்துள்ளத நிலையில் சௌதி அரசின் இந்த முடிவும் வந்துள்ளது.

 

ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை திடீரென ரத்து செய்வதற்கான காரணத்தை சௌதி அரேபிய அரசு தெரிவிக்கவில்லை.

 

கடந்த நவம்பர் மாதமே ஹம்சா பின்லேடனின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாக சௌதி அரேபிய அரசு கூறினாலும், தற்போதுதான் அதிகாரபூர்வமாக அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

 

தனது தந்தையின் இறப்புக்குக் காரணமானவர்களைப் பழிதீர்ப்பதாக கடந்த 2015-ம் ஆண்டு ஹம்சா பின்லேடன் காணொளி வெளியிட்டு இருந்தார்.

Add new comment

1 + 0 =