ஐரோப்பியரையும் நம்ப வேண்டாம் – ஈரான் தலைவர்


அமெரிக்க மக்களைபோல ஐரோப்பியர்களையும் யரும் நம்ப வேண்டாம் என்று ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமனோய் தெரிவித்துள்ளார்.

 

அந்நாட்டில் நடந்த அரசு விழா ஒன்றில் இவர் இந்த கருத்தை வெளிட்டுள்ளார்.  

 

அமெரிக்கா என்றால் அதிபர் டொனால்டு டிரம்ப், பாதுகாப்பு அமைச்சர் மைக் பாப்பேயோ, பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை போன்ற அதிகாரமிக்கவர்களை குறிக்கிறது.

 

இந்த அமெரிக்கரைபோல் நாம் ஐரோப்பியரையும் நம்பக் கூடாது. அதற்காக அவர்களை தொடர்புக் கூடாது என்று பொருளில்லை. அவர்களிடம் நம்பகத்தன்மை இல்லை என்ற கருத்தை அவர் கூறியுள்ளார்.

 

தான் பதிவியேற்ற பிறகு, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடும் விமர்சனம் செய்து வந்தார்.

 

ஆனால், ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்னரும், அதில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவை தெரிவித்தன.

 

ஈரானுடன் செய்திருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியவுடன் பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

 

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

Add new comment

1 + 3 =