ஐஎம்எஃபில் முதலாவது பெண் பொருளாதார நிபுணர்


பன்னாட்டு நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதலாவது பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

47 வயதான கீதா, அமெரிக்காவில் வசித்துவருகிறார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐஎம்எஃப்பின் பொருளாதார ஆலோசகராகவும் ஆராய்ச்சித்துறையின் இயக்குநராகவும் பணியாற்றி வந்த மாரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் என்பவரின் பதவிக் காலம் டிசம்பர் 31-உடன் முடிவடைந்த நிலையில், ஜனவரி 1-ம் தேதி கீதா கோபிநாத் பதவியேற்றுள்ளார்.

 

ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பதவியேற்கும் 11-வது நபர்தான் கீதா கோபிநாத்.

Add new comment

5 + 5 =