ஏழைகளோடு பகிர்வு - கர்தினால் டெக்லே


நவம்பர் மாதம் 17ம் தேதி கொண்டாடப்பட்ட உலக ஏழைகள் தினத்தை மணிலா நகரவாசிகளின் எழைகளோடு உணவை பகிர்ந்து கொண்டு மணிலா உயர் மறைமாவட்ட திருச்சபை தலைவர்கள் கொண்டாடியுளளனர்.

 

மணிலா உயர் மறைமாவட்ட கர்தினால் லுயிஸ் அன்றோனியோ டெக்லே தலைமையேற்று நடத்திய திருப்பலியை தொடாந்து, புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எழைகளோடு பகிர்துண்ணும் மதிய உணவு நிகழ்வில் குறைந்தது 300 பேர் பங்கேற்றனர்.

கிறஸ்தவர்கள், ஏழைகளின் அழுகுரலை கேட்பது மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில், அவர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுத்து உதவ வேண்டும் என்று மறையுரையின்போது கர்தினால் டெக்லெ தெரிவித்துள்ளார்.

 

கருணை மற்றும் இரக்க செயல்களே, எழைகளின் தினத்தை திருச்சபை கடைபிடிப்பதற்கு காரணங்களாகும் என்று கர்தினால் டெக்லே கூறியுள்ளார்.

 

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி வந்த பொதுக்காலம் 33ம் ஞாயிறை கத்தோலிக்கர்களுக்கு ஏழைகளுக்கான உலக தினம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்திருந்தார்.

 

நற்செய்தியின் இதயமாக எழைகள் இருப்பதை சிந்திப்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

 

ஏழைகளை நாம் கவனித்து பராமரிக்காவிட்டால், இதுவொரு கொண்டாட்டமாகவே இருக்க முடியாது என்று கர்தினால் டேக்லே தெரிவித்துள்ளார்.

Add new comment

4 + 4 =