ஏலத்தில் விலை போகாத ஹிட்லர் ஓவியம்


ஜெர்மனியின் சர்வாதிகாரி என கூறப்படும் ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் விலைபோகவில்லை.

 

சர்வாதிகாரியாக செயல்பட்டும், யூத மக்களைக் கூட்டம் கூட்டமாக கொன்று அழித்து இனப்படுகொலை நிகழ்த்தியவருமான அடால்ஃப் ஹிட்லர் ஓவியம் வரைவதிலும் வல்லவர்.

 

முதல் உலகப் போருக்கு முன்னர் வரை மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஹிட்லர் சுமார் இரண்டாயிரம் ஓவியங்கள் வரை வரைந்திருந்தார்.

 

ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் பிரபல ஏல நிறுவனங்களால் உலகின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படும்.

 

ஜெர்மனியின் நுரம்பெர்க் நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் ஹிட்லரின் படத்தை ஏலத்தில் எடுக்கவில்லை.

 

அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை 21,500 டாலராக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஹிட்லர் வரைந்ததாக போலி ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளதாக செய்தி பரவியதால் இந்த ஓவியம் விலைக்கு போகவில்லை என்றும் கூறுகின்றனர்.

Add new comment

7 + 12 =