ஏமன் போரை நிறுத்த கத்தோலிக்க, சர்வதேச உதவி நிறுவனங்கள் கோரிக்கை


ஏமனில் நடைபெற்று வருகின்ற மிகவும் கொடிய போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென கத்தோலிக்க மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் அழுத்தங்களை வழங்கி வருகின்றன.

 

எமனில் நடைபெறும் போரால் ஒவ்வொரு 10 நிமிடங்களிலும் ஒரு குழந்தை இறந்து கொண்டிருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது.

 

கட்நத ஒரு நுற்றாண்டில் நிகந்தள்ள மிக மோசமான மனிதநேய பேரழிவு இது என்று ஐநாவின் உலக உணவு திட்டத்தின் செயலதிகாரி டேவிட் பிரிசஸ்லே தெரிவித்திருக்கிறார்.

 

ஏமனில் வாழும் 28 மில்லியன் மக்களில் பாதி பேர் பசி பட்டினியின் கோர பிடியில் உள்ளனர்.

 

நவீன வரலாற்றில் மிக மோசமாக காலரா பரவி வருவதால் நாடு தடுமாற்றம் அடைந்துள்ளது.

 

இதனால், இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கத்தோலிக்க மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

 

அரேபிய தீபகற்பத்தின் முனையில் இருக்கின்ற இந்த நாடு கடந்த 4 ஆண்டுகளாக போரால் துன்புற்று வருகிறது.

 

ஹூதி கிளாச்சியாளர்களுக்கு எதிராக ஏமனின் அரசு படை சண்டையிட்டு வருகிறது.

 

சௌதி அரேபியாவி்ன் தலைமையிலான கூட்டுப்படை ஏமனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

Add new comment

1 + 0 =