ஏமனில் போர்நிறுத்தம் – உதவி பொருட்கள் மக்களை அடைய ஏற்பாடு


புதன்கிழமை தொடங்கி ஏமனில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.

 

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரால் மனிதநேய நெருக்கடி எற்பட்டுள்ளதால், போர்நிறுத்தம் கொண்டு வர ஐக்கிய நாடுகள் அபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருந்தது.

 

பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தம் ஒப்புகொள்ளப்பட்டிருந்தாலும்,  கடைசியில் தோல்வியில்தான் முடிந்துள்ளது.

 

இந்த பின்னணியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும்  ஒப்பு கொண்டனர்.

 

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

 

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

Add new comment

7 + 9 =