ஏமனில் கடும் ஊட்டச்சத்து குறைபாடு – ஐநா கவலை


ஏமனில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்துவருகின்ற உள்நாட்டு போர் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் துன்பப்படுவதாக  ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த உள்நாட்டு போர் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

இதில் குறிப்பிடும் படியாக, குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இ‌ல்லாமல் பட்டினியால் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

ஐ.நா.வின் முயற்சியால் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் இப்போது சண்டை ஓய்ந்துள்ளது.

 

இதன் காரணமாக, முக்கிய துறைமுகமான ஹோடேடாவில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

 

ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஒரு தலைமுறையே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Add new comment

7 + 4 =