ஏமனில் உள்நாட்டுப்போர் காரணமாக 85 ஆயிரம் குழந்தைகள் இறப்பு?


ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் பசி, பட்டினி காரணமாக 85 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

 

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொண்டு நிறுவனம்தான் 'சேவ் தி சில்ட்ரன்.

 

ஏமன் நாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பசி, பட்டினி காரணமாக இறந்துள்ளதாக இந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால், சுமார் 80 லட்சம் பேர் உணவின்றி தவிப்பதாக சில மாதங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

 

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் அரசுப்படைக்கும் ஹூதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

 

ஏமன் அரசுக்கு ஆதரவாக சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

 

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

Add new comment

6 + 1 =