ஏடிஎம் மூலம் 20 ஆயிரம் மட்டுமே – புதிய கட்டுப்பாடு


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்-யில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கின்ற புதிய கட்டுபாடு அக்டோபர் 31ம் தேதி புதன்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளது.

 

கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

 

மின்னணு பணபரிமாற்றம் மற்றும் பணமில்லா வணிக நடவடிக்கை மேற்கொள்ளவும், மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கவும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை வளர்த்து ஊக்கமூட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

 

ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ள எஸ்பிஐ வங்கி மேலும் கட்டுபாடுகளை கொண்டு வந்திருப்பதால் அந்த வங்கியில் போடப்படும் முதலீடடில் பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

Add new comment

10 + 8 =