எல்லைச்சுவரில் கட்டுவதில் சமரசம் இல்லை – டிரம்ப்


அமெரிக்க அரசு வரலாற்றில் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வந்த அரசுப் பணி முடக்கத்தை அதிபர் ட்ரம்ப் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாலும், எல்லைச்சுவர் கட்டுவதில் எவ்வித சமரசத்தையும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

 

அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக அமெரிக்காவில் கணக்கிடப்படுகிறது.

 

இதுபடி 2018-ம் நிதியாண்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது.

 

அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுவது வழக்கம்.

 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை.

 

எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான ட்ரம்ப்பின் நிதியும் இந்த பட்ஜெட்டில் அடங்குகிறது.

 

பட்ஜெட் நிறைவேற்றப்படாததால், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியது.

 

பெரும்பாலான துறைகள் மூடப்பட்ட நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கான துறைகள் மட்டும் தொடர்ந்து இயங்கின.  

 

35 நாட்களாக இருந்து வந்த அரசுத்துறை முடக்கத்தை தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கும் ட்ரம்ப், குடியேறிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுப்பதற்கு எல்லையில் தடுப்பு சுவரை கட்டுவதில் எவ்வித சமரசமும் செய்ய போவதில்லை என்று கூறியுள்ளார்.

Add new comment

5 + 2 =