எம்பிக்கள் அனுமதிககும் ஒப்பந்தத்தோடு பிரெக்ஸிட்


பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ள தலைமையமைச்சர் தெரசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதரவாக 325 வாக்குகளையும், எதிரான 306 வாக்குகளையும் பெற்று தெரீசா மே வெற்றி பெற்றார்.

 

ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான் தெரீசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை சில ஆளுங்கட்சி எம்பிக்களும், எதிர்க்கட்சியினரும் சேர்ந்து வாக்களித்து தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

 

எனவே, எம்பிக்களின் அனுமதியோடு அனைவரும் ஏற்கத்தக்க பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தெரசா மே கொண்டு வர முயல வேண்டுமென பலரும் பரிந்துரை செய்துள்ளனர்.

Add new comment

9 + 7 =