எப்போதும் பிறருக்கு பரிசாக திகழுங்கள் – திருத்தந்தை


பிறருக்கு எப்போதும் வழங்கப்படும் பரிசாக நீங்கள் திகழுங்கள் என்று தொண்டர் சேவை மைய ஊழியர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

தொண்டருக்கான சேவை மையமான ‘சார்டினா சோலிடேல்’ ஊழியர்கள் வத்திக்கானிலுள்ள ஆறாம் பாவுலின் அரங்கில் திருத்தந்தையை சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

 

உலகிலுள்ள ஏழை மக்களுக்கு உதவுகின்ற இந்த மைய உறுப்பினர்களின் முயற்சியை பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த சேவை மையத்தில் வந்துள்ள புதிய உறுப்பினர்களை வரவேற்றார்.

 

இந்த மையம் வசதியில்லாதோருக்கு தேவையான சேவை அளிக்கும் தாராளமாக மையம் என்று அவர் பராட்டியுள்ளார்.

 

இயற்கை கருவூலங்கள், வரலாறு, கலை ஆகியவற்றை கொண்ட அழகிய தீவு என்று இந்த மையத்தை உருவகப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், ஏழ்மை மற்றும் கஷ்டத்தால் இது அடையாளப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

உலகிலுள்ள மிகவும் ஏழை மக்களை இந்த மையம் சென்றடைந்திருப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.   

Add new comment

2 + 0 =