எபோலா வைரஸால் குறைந்தது 200 பேர் உயிரிழப்பு


ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள காங்கோ நாட்டில், எபோலா வைரஸ் தொற்றால் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

காங்கோவில் எபோலா வைரஸ் விரைவாக பரவி வருகிறது.

 

இந்த நாட்டின் கிழக்கில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் வந்தது.

 

அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும். 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

பேனி நகரில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாகும்.

 

சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவ குழுவினருக்கு கிளர்ச்சியாளர்களின் ஆயுதப்படை அதிக தொல்லைகள் கொடுத்து வருவதாக தெரிய வருகிறது.

 

2013-14ம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 ஆப்பிரிக்க நாடுகளில், எபோலா வைரஸ் தொற்றால், 5,420 பேர் உயிரிழந்தனர்.

Add new comment

10 + 10 =