எத்தியோப்பிய விமான விபத்து – 157 பேர் பலி


எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதில சென்ற 157 பேரும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.  

 

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு திங்கள்கிழமை காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது.

 

மேலெழுந்து சென்ற 6 நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்துவிட்டது.

 

பின்னர், அது விபத்திற்குள்ளானது தெரிய வந்தது. அதில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

எத்தியோப்பிய தலைமையமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இறந்தோர் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இந்த விமானத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Add new comment

6 + 1 =