எத்தியோப்பிய விமான விபத்து எதிரொலி - போயிங் 737 மேக்ஸ் விமானத்திற்கு தடை


போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க இந்தியா உள்பட மூன்று நாடுகள் தடை விதித்துள்ளன.

 

முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதற்கு தடை விதித்திருந்தன.  

 

எத்தியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் 157 பேர் பலியானதன் எதிரொலியாக இந்த தடைகள் வந்துள்ளன.

 

இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் போயிங் 737 மேக்ஸ்8 ரகத்தில் 8 விமானங்களும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 5 விமானங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யாவின் நைரோபி நகருக்கு சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பயணிகள் உயிரிழந்தனர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தோனேசியாவின் லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது 737 மேக்ஸ் ரக விமானமாகும். இந்த விபத்தில் 180 பேர் பலியானார்கள்.

 

இதன் காரணமாக 737 ரக மேக்ஸ் ரக விமானத்தில் பாதுகாப்பு முறைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து,  பல்வேறு நாடுகள் இந்த ரக விமானங்களை இயக்கத் தடை விதித்து வருகின்றன.

Add new comment

3 + 10 =