உலக வங்கியின் தலைவர் பதவி விலகல்


உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் பதவி விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

கடந்த 2011ம் ஆண்டு தலைவர் பொறுப்பை ஏற்ற ஜிம்மின் முதல் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு முடிவடைந்தது.

 

2-வது முறையாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இவரை ஜிம் யாங் கிம் பரிந்துரைத்தார்.

 

வேறு யாரும் இந்த பதவிக்கு போட்டியிடாததால், இரண்டாவது முறையாக அவரே தேர்வு செய்யப்பட்டார்.

 

2022-ம் ஆண்டு இவரது பதவிக்காலம் முடிவடையும். ஆனால்,  இந்த மாத இறுதியில் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜிம் யாங் கிம் அறிவித்துள்ளார்.

 

உலக வங்கியின் மிகப்பெரிய உறுப்பினர் நாடாக அமெரிக்கா இருப்பதால், அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அவருக்கு விருப்பமான நபரை உலக வங்கி தலைமை பொறுப்பில் அமர்த்துகின்ற வாய்ப்பு அவருக்கு இந்த ராஜினாமா மூலம் கிடைத்துள்ளது.

 

189 நாடுகளை உறுப்பினராக கொண்ட உலக வங்கி, அரசுகளுக்கான நிதி உதவி அளிக்கும் மிகப்பெரும் அமைப்பாக இயங்கி வருகிறது.

 

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கப்பட்ட இந்த உலக வங்கியின் தலைவர்கள் அனைவருமே அமெரிக்கர்களாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Add new comment

1 + 2 =