உலக வங்கியின் தலைவராக தமிழ் பெண் இந்திரா நூயி?


உலக வங்கியின் தலைவராக தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த 63 வயதான இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’யின் தலைமை செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திரா நூயி பதவி விலகினார்.

 

இவரது பெயரை உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக. ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

 

டிரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், இந்திரா நூயியை ‘வழிகாட்டி, உத்வேகம் தருபவர்’ என டுவிட்டரில் இவான்கா குறிப்பிட்டுள்ளார்.

Add new comment

2 + 5 =