உலக நோயாளிகள் நாள் செய்தியில் புனித அன்னை தெரசாவை புகழ்ந்த திருத்தந்தை


நோயாளிகளையும், ஒதுக்கப்பட்டோரையும் மனப்பூர்வமாக கவனித்து கொள்வது, வாழ்க்கையை நிர்பந்தித்து, சுரண்டுகின்ற மோசமான மற்றும் அலட்சிய கலாசாரத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழி என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

பிப்ரவரி 11ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக நோயாளிகள் நாளுக்கு வழங்கிய செய்தியில், கடவுளின் பரிசான வாழ்க்கை இன்றைய தனி மனிதவாதம் மற்றும் சமூகப் பிரிவுகளுக்கு சவால் விடுப்பதற்கு சிறந்ததாகும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

 

வாழ்க்கை ஒரு பரிசான இருப்பதால், தனிப்பட்ட உடமை அல்லது தனியார் சொத்தாக மனித வாழ்க்கையை குறைத்துவிட முடியாது.

 

குறிப்பாக, மருத்துவ மற்றும் உயிரி தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வாழ்க்கை மரத்தை சுரண்டுவதற்கு நமக்கு சோதனை எழலாம் என்று ஜனவரி 15ம் நாள் வத்திக்கான் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2019ம் ஆண்டு உலக நோயாளிகள் நாளுக்கான கத்தோலிக்கர்களின் முக்கிய கொண்டாட்டம், 2016ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட புனித அன்னை தெராசா ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணியாற்ற தொடங்கிய இந்தியாவின் கொல்கத்தா நகரில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

நோயாளிகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் சேவை புரிந்த புனித அன்னை தெரசா இரக்கப் பணிகளுக்கான மாதிரி என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஏழைகளோடு கடவுளின் நெருக்கத்தை காட்டுகின்ற சாட்சியமாக இருப்பதை நமக்கு அவர் நினைவூட்டுவதாக கூறியுள்ளார்.

Add new comment

3 + 3 =