உலக கோப்பை ஹாக்கி – காலிறுதியில் இந்தியா


இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா காலிறுதியில் நுழைந்துள்ளதால், இன்னும் நன்றாக விளையாடி இறுதி போட்டிக்கும் செல்லும் நம்பிக்கை உருவாகியுள்ளது.

 

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒரிசா மாநிலத்தில் புவனேஷ்வரில் நடக்கிறது.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கனடா அணியை எதிர்கொண்டு, 5-1 என வெற்றிபெற்று காலிறுதிக்கும் வெற்றி பெற்றுள்ளது.

 

இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத், சிங்லென்சனா,  ரோஹிதாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தகர். லலித் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற உதவினர். கனடாவின் விளையாட்டு வீரர் சன் மட்டும் ஒரே ஒரு கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா காலிறுதியில் நுழைந்துள்ளதால் தங்களின் விளையாட்டு திறமையை இன்னும் அதிகமாக வெளிகொணர்ந்து, இறுதி போட்டியில் நுழையும் என்ற எதிர்பார்ப்பு ரகிசர்களிடம் எழுந்துள்ளது.

Add new comment

1 + 0 =