உலக இளைஞர் தினத்தில் புனித பயணத்தை தடுத்த பாகிஸ்தான் அதிகாரிகள்


ஆள்கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டால், பனாமாவில் சமீபத்தில் நடைபெ்றற உலக இளைஞர் தின நிகழ்விற்கு செல்வதில் இருந்து பாகிஸ்தான் கத்தோலிக்க குழு ஒன்று இரண்டு முறை தடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை 10 பேர் கொண்ட அந்த புனித யாத்திரிகர் குழு மறுத்துள்ளது. திருச்சபை அதிகாரிகள் அவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்.

 

பனாமாவுக்கு செல்கின்ற துருக்கி விமானத்தில் அவர்கள் ஏறுவதற்கு இருந்து மத்திய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.

 

மூன்று நாட்களுக்கு பின்னர் முயற்சித்த இந்த இளைஞர்கள் மீண்டும் தடுக்கப்பட்டு, அதிகாரிகளிடம் இருந்து வசைமொழிகளை பெற்றுள்ளனர்.

 

ஆட்களையும், போதை மருந்துகளையும் கடத்துவதற்கு இந்த உலக இளைஞர் தின நிகழ்வு ஒரு சாக்குப்போக்கு என்று அதிகாரிகள் கூறியதாக லாகூரில் ஆசிரியராக பணியாற்றும் அஸ்ஹார் நஸீர் கூறியுள்ளார்.

Add new comment

2 + 0 =