உலக இளைஞர் தினத்திற்கு செல்லும் தென் கொரியர்கள்


வாழ்க்கையில் முதல்முறையாக சியோல் உயர் மறைமாவட்ட தென் கொரிய இளைஞர்கள் உலகின் அடுத்த பக்கத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

ஜனவரி 17 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் மறைமாவட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனவரி 14ம் தேதி கோஸ்டோ ரிக்காவை விட்டு சூன்-டியேக் துணை ஆயர் பீட்டர் ச்சுவுங் அவர்களோடு இந்த குழு சென்றுள்ளது.

 

அதன் பின்னர் ஜனவரி 2 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் 2019 உலக இளைஞர் தினத்திற்காக பனாமா நகருக்கு 15 மணிநேர பேருந்து பயணத்தை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

 

கோஸ்டோ ரிக்காவின் காடேகோ மறைமாவட்டத்தின் சான் எஸ்டெபான் பரோடோமார்டிர் தேவாலயத்தில் இந்த கொரிய விருந்தினருக்கு சிறப்பு இசை நிகழ்ச்சியோடு வரவேற்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

 

கெரியாவின் கன்னி மரியாள் சிலையையும், 103 மறைச்சாட்சி புனிதர்களின் ஓவியத்தையும் வரவேற்பு அளித்த தேவாலயத்திற்கு பரிசாக இந்த சியோல் புனித பயணிகள் வழங்கியுள்ளனர்.   

 

தன்னார்வ தொண்டர் நடவடிக்கைகள், பேரணி மற்றும் பல நாட்கள் மறைமவட்டங்களிலுள்ள உள்ளூர் திருத்தலங்களில் புனிதப் பயணம் ஆகிய நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்பார்கள்.

 

சியோலை விட்டு செல்வதற்கு முன்னால், கடவுளின் பாதுகாப்பையும், ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு சிறப்பு திருப்பலியை இந்த இளைஞர்கள் நிறைவேற்றுவர்

Add new comment

5 + 0 =