உலக அளவில் சித்ரவதை அனுபவிக்கும் 300 மில்லியன் கிறிஸ்தவர்கள்


அதிகமாக சித்தரவதையை எதிர்கொள்ளும் மத குழுவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

திருச்சபையில் தேவையில் உழல்வோருக்கான உதவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது,

 

உலக அளவில் சுமார் 300 பில்லியன் கிறிஸ்தவர்கள் வன்முறை, கைது மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடுகளில் வாழ்வதாக கூறப்படுகிறது.

 

உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் 7 பேரில் ஒருவர் சித்தரவதைக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகில் வாழும் 61 சதவீத கிறிஸ்தவர்கள் மத சுதந்திரம் மதிக்கப்படாத நாடுகளில் வாழுகின்றனர்.

 

இறைநம்பிக்கையை வெளிப்படு்த்த முழு சுதந்திரம் இல்லாத நாடுகளில் 10 கிறிஸ்தவாகளில் 6 பேர் உள்ளனர்.

 

2018ம் ஆண்டு வெளியான மத சுதந்திர அறிக்கையில் வெளியான சில புள்ளிவிவரங்கள் இதுவாகும்.   

Add new comment

7 + 9 =