உலகில் சக்தி வாய்ந்த பெண்களில் ஏஞ்சலா மெர்க்க்ல் முதலிடம்


ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கெல் அம்மையார் உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் முதலிடம் பெற்றுள்ளார்.

 

பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தையும், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

 

உலகின் செல்வந்தர்கள் , சக்தி செல்வாக்கு நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

 

வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம், கேளிக்கைத்துறை, அரசியல், கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

 

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, கிரன் மசூம்தார் ஷா, ஷோபனா பார்தியா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகிய நான்கு இந்திய பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Add new comment

7 + 1 =