உலகில் அதிக வயதான மனிதர் மரணம்


உலகில் அதிக வயதான மனிதராக நம்பப்படும் மசாசோ நொனாகா, அவரது 113-வது வயதில் ஜப்பானில் காலமானார்.

 

1905-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த மசாசோ நொனாகா, 113-வது வயதில் ஜன. 20-ம் தேதி வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார்.

 

இதற்கு முன்னதாக ஸ்பெயினைச் சேர்ந்த ஃப்ரான்சிச்கோ ஒலிவெரா கடந்த ஆண்டு இறந்த பிறகு, உலகின் மூத்த மனிதராக நொனாகாவை கின்னஸ் அறிவித்தது.

 

1931-ல் திருமணம் செய்து கொண்ட நொனாகாவுக்கு, 5 மகன்கள் பிறந்தனர்.

 

உலகிலேயே நீண்ட காலம் வாழும் நபர்கள் ஜப்பானில் அதிகமாக உள்ளனர்.

 

முன்னதாக, ஜூன் 2013-ல் ஜப்பானைச் சேர்ந்த உலகின் வயதான மனிதர் ஜிரோமன் குமுரா தன்னுடைய 116-வது வயதில் காலமானார்

Add new comment

1 + 10 =