உலகிற்கு தேவை குணமளித்தல், கண்டனம் அல்ல – திருத்தந்தை


கிறிஸ்துவிடம் இருந்து தூண்டுதல் பெற்று, மக்கள் விடுதலை செய்யப்பட்டு குணமாக்கப்பட வேண்டுமென்று அறநெறி இறையியலாளர்கள் விரும்புகின்றனர். கண்டிப்பு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்து்ளளார்.

 

மனிதகுலத்தின் பொது தாயகமாக இருக்கின்ற இந்த பூமியும், பெருமளவில் பராமரிப்பு பெற வேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் கோணத்தையும் அறநெறி இறையியல் சேர்த்து கொள்ள வேண்டுமென திருத்தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அறநெறி இறையியலில் சிறப்பு பட்டம் அளிக்கும் ரோமிலுள்ள அல்போசியன் கழக பேராசிரியர் மற்றும் மாணவர்களோடு பிப்ரவரி 9ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் விவாதம் நடத்தினார்.

 

புனித அல்போன்சியுஸ் லிகுவோரியின் போதனைகளால் தூண்டுதல் பெற்று 70 ஆண்டுகளுக்கு மு்ன்னால், மீட்பவரின் சபையினர் இந்த கல்லூரியை நிறுவினர்.

 

உலகில் இருந்து ஒருவரை காபாற்றிக்கொள்வதல்ல அல்லது கண்டிப்பதல்ல தேவையானது, கிறிஸ்துவின் செயல்களை பின்பற்றி குணமாக்கவும், விடுதலை அளிக்கவும் பணிசெய்ய வேண்டுமென புனித அல்போன்சியுஸ் அறிந்து வைத்திருந்துள்ளார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

 

பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் பாகுபாட்டிற்கு மக்களை வழிநடத்தி செல்லும் பல வடிவங்களிலுள்ள பாவத்தின் சக்தியால் மக்கள் ஆட்கொள்ளப்படுவதில் திருச்சபை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த பூமியை பராமரித்து கொள்ளும் தேசிய கடமையையும், பொறுப்புணர்வையும் மக்கள் இழந்து வருவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியு்ளளார்.  

Add new comment

1 + 19 =