உரிமைகளுக்கான விழிப்புணர்வை அதிகரித்துள்ள போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை


போதைப் பொருட்களை ஒழிக்கும் அரசு நடவடிக்கையால் நீதிக்கு புறம்பான கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், பிலிப்பீன்ஸின் தெற்கிலுள்ள ஒரு கத்தோலிக்க மறைமாவட்டம் மனித உரிமை மீறல் விழிப்புணர்வை தீவிரப்படுத்தியுள்ளது.

 

மனித உரிமைகள் மீறலை கண்காணிப்பது மற்றும் ஆவணப்படுத்துவது பற்றி பயிற்சி அரங்குகள் மூலம் மார்பிள் மறைமாவட்டத்தின் குருக்கள் மற்றும் பொதுநிலையினருக்கு கற்பிக்கப்படுகிறது.

 

தற்போதைய மோசமான நிலைமையில் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை பங்கு மக்களுக்கு அதிகமாக அளிக்கும் நோக்கத்துடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்த மறைமாவட்டத்தின் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை எரியல் டெஸ்டோரா கூறியுள்ளார்.

Add new comment

4 + 9 =