உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்


பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவிலுள்ள உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.

 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயா் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த நிலையில், நீண்ட விவாதத்திற்கு பின்னா் இது நிறைவேறியது.

 

மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

 

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது திராவிட முன்னேற்ற கழகமும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் எதிர்ப்பு தெரிவித்தன.

Add new comment

1 + 0 =