உத்தர பிரதேசத்தில் 3 மாதம் திருமணங்களுக்கு தடை


இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் கும்பமேளா, புத்த பூா்ணிமா போன்ற சிறப்பு நிகழ்வுகள் வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணங்கள் நடைபெற தடை போடப்பட்டுள்ளது.  

 

கும்பமேளா, புத்த பூா்ணிமா, மவுனி அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு புனித நிகழ்வுகள் இந்த 3 மாதங்களில் வருகின்றன.

 

இதனால், உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் கங்கையில் புனித நீராடுவதற்காக வருகை தருகிறார்கள்.

 

மக்கள் அதிக அளவு கூடுவதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அரசு சார்பில் சில முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

இந்நிலையில் திருமணங்களுக்கு தடையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Add new comment

10 + 10 =