உத்தர பிரதேசத்தில் கும்பலால் போலீஸ் கொலை - திட்டமிடப்பட்டதா?


உத்தரபிரதேசத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தில் பசு வதை செய்யப்படதாக போராட்டம் நடத்திய கும்பலால் போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லபபட்டுள்ளார்.

 

இந்த அதிகாரின் மரணம் பல்வேறு ஐயங்களை இப்போது தோற்றுவித்துள்ளது.

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் இந்த வன்முறையில் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று அவரது சகோதரி குற்றஞ்சாட்டியு்ளளார்.

 

உத்தரப்பிரதேசத்தில் பசு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கடந்த 2015ம் ஆண்டு பசுவதை  செயற்பாட்டாளர்களால் அடித்துக்கொல்லப்பட்ட முகமது இக்லக் வழக்கை விசாரித்து வந்தவர் சுபோத் குமார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

அடித்துக்கொல்லப்பட்ட 55 வயதான முகமது இக்லக் வழக்கை புலந்த்சாகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் விசாரித்து வந்த நிலையில், புலந்த்சாகரின் சிங்கராவதி பகுதியில் உள்ள ஒரு வயல்பகுதியில் பசுமாட்டின் உடல்பகுதிகளும், கன்றுக்குட்டியின் உடலும் இருந்ததாக் கூறி கும்பல் ஒன்று சாலை மறியல் செய்தது.

 

அவர்களை கலைக்க வந்த போலீஸார் மீது அந்தக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது,

 

வன்முறை எல்லை மீறவே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 20 வயதான இளைஞர் ஒருவர் இதில் உயிரிழந்தார்.

 

வன்முறையாளர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

 

இந்நிலையில், முகமது இக்லக் வழக்கை விசாரித்த சுபோத் குமார் சிங்கை கொல்ல வேண்டும் என்பதற்காகக் இந்த கலவரம் உருவாக்கப்பட்டது என சந்தேகத்தை இன்ஸ்பெக்டரின் சகோதரி எழுப்பியுள்ளார்.

Add new comment

9 + 6 =