உடல் பருமனை ஏற்படுத்தும் உணவுகளுக்கு தடை


உடல் பருமனை ஏற்படுத்தும் உணவு வகைகளை விற்க லண்டன் பொதுப் போக்குவரத்துக்களில் தடை விதிக்கப்படவுள்ளது.

 

இந்த தடை 2019 பிப்ரவரி மாதம் தொடங்கி நடைமுறைக்கு வரும் என்று லண்டன் நகர மேயர் சாதிக் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

பேருந்துகள், சுரங்க தொடர்வண்டிகள் மற்றும் அனைத்து தொடர்வண்டிகள் மற்றும் சில  தெடர்வண்டி நிலையங்கள் உள்ளிட்ட லண்டனின் பொதுப் போக்குவரத்து அனைத்திலும் ஜங்க் ஃபுட் உணவுகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

இது பற்றி பொதுமக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 82 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

Add new comment

1 + 3 =