உக்ரைன் கீழை திருச்சபை விவகாரம் – அழிக்கப்படும் உலக பண்பு என விமர்சனம்


உக்ரைன் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையில் செயல்படுத்தப்பட்டிருப்பது அந்த திருச்சபையின் உலக கோணத்தை அழித்துவிடும் முயற்சி என விமர்சனம் முன்வைக்க்பபட்டுள்ளது.

 

உக்ரைன் கீழை திருச்சபையில் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை எடுத்துள்ள முடிவை விமர்சித்து மாஸ்கோ முதுபெரும் தந்தை இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

 

உலக பண்பு கொண்டுள்ள ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் ஒற்றுமையை குலைக்கின்ற செயல் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.

 

திருச்சபைகளின் எல்லைக்கான போராட்டம் அல்ல. உலகில் இருந்து வரும் ஒரேயொரு சக்தி வாய்ந்த கீழை திருச்சபையை அழித்து விடுவதற்கு எதிரான போராட்டம் இதுவென முதுபெரும் தந்தை கிரில் குறிப்பிட்டுள்ளார்.

 

இஸ்தான்புல் முதுபெரும் தந்தை பார்த்தோலோமேயு-வுடன் சந்திப்பு நடத்த தயாரிப்புகள் மேற்கொண்டதையும், ராஜதந்திர முறையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட முயற்சி அது என்றும் முதுபெரும் தந்தை கிரில் பேசியுள்ளார்.

 

Add new comment

7 + 12 =