ஈரான் மீது பாயும் அமெரிக்காவின் கடுமையான தடைகள்


இதுவரை விதிக்காத பல கடுமையான தடைகளை ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ளது.

 

ஈரான் மீதும் அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்கின்ற நாடுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை அதிபர் டிரம்ப் மீண்டும் விதித்து்ளளார்.

 

இந்த தடையால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு ஈரானின் பொருளாதாரம் நலிவுறும்.

 

அமெரிக்காவின் இந்த செயல்பாட்டுக்கு எதிராக ஞாயிறன்று ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் பேரணி நடத்தினர்.

 

நாட்டின் பாதுகாப்பு வலிமையை வெளிக்காட்டும் வகையில் இரண்டு நாட்கள் (திங்கள், செய்வாய்) விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Add new comment

13 + 0 =