ஈரான் மீது அமெரிக்கா தடை – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?


ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு, அதன் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

ஈரானும், பெரிய 6 பொருளாதார நாடுகளும் செய்திருந்து அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விலகியது.

 

இதனை தொடர்ந்தே ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

 

மேலும், அமெரிக்க நட்புறவு நாடுகளும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது.

 

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் அமெரி்க்காவோடு வணிகம் செய்ய வேண்டியதில்லை என்று டிரம்ப் முன்னதாக தெரிவித்திருக்கிறார்.  

 

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நட்பு நாடுகள் மீது, நவம்பர் 4ஆம் தேதி முதல் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இதனால், ஈரானின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இருந்து வரும் இந்தியாவை பெரிதும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  

 

கடந்த நிதியாண்டில் ஈரானில் இருந்து 22 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது.

 

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை 14 மில்லியன் டன்களாக குறைத்தால், பொருளாதார தடை விதிப்பில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்க அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

Add new comment

1 + 7 =