ஈரானோடு பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா திட்டம்


ஈரானோடு பண்டமாற்று முறையில் சில பொருட்களை வர்த்தகம் செய்ய இந்தியா திட்டமிட்டு வருகிறது.

 

அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பிறகும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா அதற்கான கட்டண தொகையை இந்திய ரூபாயில் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா திட்டமிட்டு வரும் பண்டமாற்று முறையால் விலையேற்ற பாதிப்பு, ரூபாய் மாற்று தொகை போன்ற பிரச்சினைகள் இருக்காது என்றும், அந்நியச் செலாவணி கையிருப்பு பராமரிப்பதில் சிக்கல் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

அதிக ஏற்றுமதி வாய்ப்புள்ள நாடுகளுடன் சொந்த நாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்வதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 

இது தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்துடனும் இந்தியா சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

இதன் மூலம். டாலர் மதிப்பில் வர்த்தகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் இனி ஏற்படாது.

 

மேலும் ஈரானின் சாபர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாகவம் இந்தியாவும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன..

 

ஈரானிடம் இருந்து உரத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு நிகரான தொகைக்கு இரும்பு பொருட்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முன் வந்துள்ளது.

 

விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

Add new comment

4 + 2 =