ஈரானில் போரை உருவாக்க அமெரிக்க திட்டமா?


ஈரானில் போரை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி கோமனி தெரிவித்துள்ளார்.

 

பொருளாதாரத் தடை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளைப் சாக்குப்போகக்காக கூறி, ஈரானில் போரை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. எனவே ஈரான் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுத விநியோகத்தை அதிகரித்து இந்த பிரதேசம் முழுவதும் ஆபத்தான நிலையை அமெரிக்கா  உண்டாக்கி வருவதாக கடந்த வாரம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவை கண்டித்திருந்தார்.

 

ஈரானுடன் அமெரிக்கா உள்பட 6 முக்கிய நாடுகள் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.  

 

தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன்  அந்நாட்டுடன் எந்த நாடும் கச்சா என்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் தெரிவித்து அதற்கான பின்னணி வேலைகளையும் செய்து வருகிறது.

Add new comment

1 + 11 =