ஈரானில் தங்க நாணய வர்த்தகருக்கு தூக்கு தண்டனை


தங்க காசுகளின் அரசர் என்று அறியப்பட்ட ஈரான் தங்க நாணய வர்த்தகர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

தங்க சந்தையை பெருமளவு பாதிக்கும் அளவுக்கு அதிக தங்க நாணயங்கள் பதுக்கி வைத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

 

வாஹித் மஸ்லாமியன் என்கிற இந்த தங்க நாணய வர்த்தகரும்,, இன்னொரு நாணய வர்த்தகரும் உலகில் ஊழல் மோசடியை மிக விரைவாக வேரூன்ற செய்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் தூக்குத் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

மஸ்லூமியனும், அவரது சகாக்களும் 2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்து, தங்க சந்தையை தங்களுக்கு சாதகமாக ஆட்டிப்படைத்து வந்ததாக ஈரான் மாணவர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Add new comment

2 + 0 =