ஈராக்கில் 200க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள்


ஈராக்கில் 200க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகளை ஐக்கிய நாடுகள் பேரவை கண்டறிந்துள்ளது.

 

முன்னதாக இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாத குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் இந்த மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

 

ஈராக்கின் நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் என்ற  வடக்கு மற்றும் மேற்கு ஆளுநகரங்களில் இந்த புதைக்குழிகள் உள்ளன.

 

இந்த புதைக்குழிகளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

2014ம் ஆண்டு ஈராக்கில் கைபற்றிய பகுதிகளில், இஸ்லாமிய அரசு குழுவினர் தங்களுக்கு எதிரானோரை கொன்று குவித்தனர்.

 

அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் உதவியோடு ஈராக் அரசு படை மேற்கொண்ட தரை வழி தாக்குதல் நடவடிக்கையால் படிப்படியாக இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவினர் அழிக்கப்பட்டனர்.

 

இந்த குழுவை சேர்ந்த சிலர் இன்னும் ஆங்காங்கு காணப்படுகின்றனர்.

Add new comment

11 + 6 =