இஸ்லாமை இழிவு செய்ததாக இந்தோனீஷிய மாணவருக்கு சிறை?


இஸ்லாமை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மாணவர் ஒருவருக்கு 18 மாத சிறை தண்டனையும், 715 டாலர் அபராதமும் விதி்கக வேண்டுமென இந்தோனீஷிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு்ள்ளனர்.

 

மேடானில் இருக்கும் வட சுமத்ரா பல்கலைக்கழகத்தின் 22 வயதான அகுங் குர்னியா ரிடோன்கா, இ்ஸ்லாமை இழிவுப்படுத்தியதாக தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எரிக்கப்படும் இஸ்லாம் கொடியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கேலி செய்ததற்காக அவர் இந்த விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

 

2018ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தடைசெய்யப்பட்ட ஹிஸ்ப்உத்-தாக்ரிர் தீவிரவாத குழுவான கொடியை மேற்கு ஜாவாவிலுள்ள காருட்டில் 3 முஸ்லிம் இளைஞர்கள் எரித்தனர்.

 

அக்டோபர் 24ம் தேதி ரிடோங் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு எரித்த கொடியில் எழுதப்பட்டிருந்த இஸ்லாமின் ஒரே கடவுளை பற்றி விளக்குகின்ற வசனத்தை கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த பதிவிட்ட அடுத்த நாள் அவரது வீட்டை பலர் சூழந்துகொண்டு போராட்டம் நடத்த, இந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

 

இந்த மாணவரது செயல்பாடு, பல்சமய இணக்கத்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று இந்த விசாரணையின்போது நீதிபதிகளின் அமர்வில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

 

இந்த மாணவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு பதிவு செய்த உள்ளூர் மசூதியின் அதிகாரியான முகமது இர்வான்சியா புத்ரா, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ள தண்டனை வழங்க்ப்பட்டால் திருப்தி அடைவதாக கூறியுள்ளார்.

Add new comment

3 + 1 =