இலங்கை வடக்கு மகாண ஆளுநராக முதல் முறையாக தமிழர்


இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முதன்முதலாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கைத் தமிழரான முனைவர் சுரேன் ராகவன் வடக்கு மாகாண புதிய ஆளுநராக திங்கள்கிழமை பதவியேற்றுள்ளார்.

 

இலங்கை அரசியலில் முக்கியமான தருணங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நற்பெயர் இவருக்கு உள்ளது.

 

இலங்கையின் வடக்கு மாகாணம் மிக முக்கியத்துவம் வாய்ச்ததாக கருதப்படுகிறது.

 

அதிபர் சிறிசேனா தலைமையில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.

 

ஆளுநர் சுரேன் ராகவன் இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

 

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பௌத்த கல்விக்கான ஆக்ஸ்ஃபோர்டு நிலையத்தில், ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேன், பல ஆண்டுகள் அங்கு  ஆய்வுப் பணிகள் மேற்கொண்டுள்ளார்.

Add new comment

3 + 14 =