இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை


இலங்கை நாடாளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ள உத்தரவிற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் டிசம்பர் 7ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்திருப்பது சரியல்ல என்று  உயர் நீதிமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

மேலும், இலங்கை ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே என்று 10க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்காமல் அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டுமென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

 

அரசியலமைப்பு சட்டத்ப்படியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக சட்டமா அதிபர் வாதாடினார்.

 

அடிப்படை உரிமை மனுக்களை டிசம்பர் 4 முதல் 6 ஆம் தேதி வரை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Add new comment

1 + 3 =