இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு – அடுத்த ஆண்டு ஜனவரி 5இல் தேர்தல்


இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

 

இலங்கையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தன.

 

இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டவுடன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார்.

 

பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இலங்கைக்கு அவரே பிரதமர் எனவும், அரசியல் சாசனப்படி, ராஜபக்சே பதவியேற்றது செல்லாது எனவம் கூறி வந்தார்.

 

அதிபர் சிறிசேனாவின் இந்த முடிவுக்கு சபாநாயகர் கரு. ஜெயசூரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே, 118  நாடாளுமன்ற உறுபபினர்க்கள் கையெழுத்திட்டு ராஜபக்சேவுக்கு எதிராக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

 

மகிந்தாவுக்கு ஆதரவு சேர்க்க குதிரை பேரம் நடைபெற்று வரவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

 

ஆனால், பல கட்சியினர், மகிந்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டதால், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

 

ஜனவரி 5 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஜனவரி 17 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் பதவியேற்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

18 + 0 =